Filmfare விருது விழாவுக்கு சாய் பல்லவி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? இதோ

சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி, இவருக்கு அறிமுகமே தேவையில்லை. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். Ek Din படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், விரைவில் வெளிவரவுள்ளது.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ராமாயணா படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கல்கி 2 படத்தில் தீபிகா படுகோன் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக சுமதி கதாபாத்திரத்தில் சாய் பல்லவிதான் நடிக்கப் போகிறார் என உறுதியாக கூறப்படுகிறது.
ஆடையின் விலை
பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி சமீபத்தில் அமரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்கிற Filmfare விருது வென்றார். இந்த விருது விழாவிற்கு நடிகை சாய் பல்லவி அணிந்து வந்த ஆடை வைரலாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி அணிந்து வந்த ஆடை Light Beige Georgette Pearl Embroidered Kurta Set ஆகும். இந்த ஆடையின் விலை ரூ. 42,500 என தகவல் வெளியாகியுள்ளது.
Effortless. Elegant. Eternal 🌸♥️#SaiPallavi #FilmFare#70thFilmFareAwardsSouth pic.twitter.com/FvoHbUi2ez
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) February 22, 2026






