Ballerina திரை விமர்சனம்

Ballerina திரை விமர்சனம்


ஹாலிவுட்டில் ப்ரான்சிஸ் என்ற ஒரு கல்ச்சர் உள்ளது, அதை வைத்து பல படங்கள் மெகா ஹிட் ஆக, அதிலேயே தற்போது ஜான் விக் படத்தின் ஒரு பகுதியாக ஹாலிவுட் ரசிகர்கள் பேவரட் அனா டி ஆர்ம்ஸ் நடிப்பில் லென் வைஸ்மேன் இயக்கத்தில் வெளிவந்துள்ள Ballerina ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Review

கதைக்களம்


படத்தின் ஆரம்பத்திலே அனா டி ஆர்ம்ஸ் சிறு வயதில் இருக்கும் போதே ஒரு குரூப் வந்து அவர் கண் முன்னாடியே அவருடைய அப்பாவை கொன்று விடுகின்றனர்.


அந்த சிறு வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவரை வின்ஸ்டன் ராஸ்கோ ரோமாவில் பாதுக்காப்பிற்காக சேர்த்து விடுகிறார்.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Reviewஅனா அங்கு மிக கடுமையான பயிற்சிகள் எடுத்ததோடு அனைத்து விதமான போராட்டத்திற்கும் அனா தயார் ஆக, அவருக்கு ஒரு சிலரை காப்பாற்றும் சிறு சிறு ப்ராஜெக்ட் கிடைக்கிறது.


அப்படி ஒரு ப்ராஜெக்ட்-ல் ஒருவனை கொல்ல அவன் கையில் தன் அப்பாவை கொன்றவன் போல் ஒரு சிம்பள் இருக்க, அதற்கு பழிவாங்க அனா புறப்படுகிறார், அவரின் பழிவாங்கும் நோக்கம் வெற்றி பெற்றதா, இதுவே மீதிக்கதை.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Review

படத்தை பற்றிய அலசல்


அனா டி ஆர்ம்ஸ் படம் முழுவதும் ஆக்‌ஷன் சரவெடி தான், ஒரு ஹீரோக்கு நிகராக அடி தூள் கிளப்பி மொத்த படத்தையும் தன் தோளில் சுமக்கிறார், அதிலும் தன் தந்தையை இழந்த வலியுடன் அவர் சண்டைக்கு தயாராவது, தன்னை விட வலுவான ஆண்களை எதிர்ப்பது என காட்சிக்கு காட்சி ஆக்‌ஷன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார்.


அதிலும் ஜான் விக் சீரிஸ் என்றாலே சண்டைகாக தான் பார்க்க செல்வார்கள், அதிலும் அந்த சண்டை எந்த அளவிற்கு வித்தியாசமாகவும் என்ன பொருள் பயன்படுத்துகிறார்கள் என்பதே இதன் சிறப்பு.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Review

அந்த வகையில் இதில் கத்தி, துப்பாக்கி தாண்டி கிளைமேக்ஸ் எல்லாம் நெருப்பு Vs தண்ணீர் என்பது போல் வரும் சண்டை எல்லாம் இன்னும் எவ்ளோ தான்பா யோசிப்பீங்க என்று கேட்க தோன்றுகிறது. அதிலும் ஒரு காட்சியில் சண்டையை காட்டாமலேயே எப்படி அனா எல்லாரையும் அடித்தார் என்று காட்டும் விதம் செம.


ஜான் விக் ராஸ்கோ ரோமாவிற்கு உதவிகாக வரும் இடத்தில் அனா டி ஆர்ம்ஸை சந்திப்பது, அனா அவரிடம் யோசனை கேட்பது, கிளைமேக்ஸில் அனா-வை கட்டுப்படுத்த ஜான் விக்-கே வருவது என கனேக்ட் செய்த விதம் சூப்பர்.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Review

ஆனால், வழக்கம் போல் ஜான் விக் என்பது ஓர் உலகம் அதில் நாங்கள் எங்க இஷ்டத்துக்கு ஏதாவது செய்வோம் போன்ற லாஜிக் அத்துமீறல் எல்லை மீறியே உள்ளது, அதிலும் அனா ஓர் ஊருக்குள் சென்று தன் அப்பாவை கொன்ற கல்ட் கேங்-யை பழி வாங்க செல்ல, அந்த ஊரே அவரை கொல்ல வருகிறது, இவரும் அந்த ஊரையே அடித்து தும்சம் செய்வதெல்லாம்..ஷப்பா ஒரு நியாயம் வேனாமப்பா.

டெக்னிக்கல் ஆக படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு, அந்த இரவு நேர சாலைகளில் ஜொலிக்கும் பில்டிங்-யை காட்டிய விதம் செம கலக்கல்.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Review


க்ளாப்ஸ்


அனா டி ஆர்ம்ஸ் தூள் பெர்ப்பாமன்ஸ்.


படத்தின் ஸ்டெண்ட் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு.


ஜான் விக் கனேக்ட் செய்த விதம்.


பல்ப்ஸ்



எல்லை மீறிய லாஜிக் மீறல்கள்.


இன்னும் கொஞ்சம் எமோஷ்னல் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம்.


மொத்தத்தில் லாஜிக்கை மறந்து இந்த ஜான் விக் உலகிற்கு வரும் அனைவருக்கும் ஆக்‌ஷன் அறுசுவை விருந்து உறுதி.

Ballerina திரை விமர்சனம் | Ballerina Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *