AK 64 படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் உச்ச நட்சத்திரங்கள்.. இதோ பாருங்க

AK 64
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம்தான் AK 64.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இன்று படப்பிடிப்பு
இந்த நிலையில், இன்று AK 64 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. படக்குழுவினர் ஏற்கனவே அங்கு சென்று ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும், இன்று படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. சென்சேஷனல் இளம் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்தான்.
அவரை தொடர்ந்து மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குநர் மிஸ்கின், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.






