8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் துரந்தர் 2 செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

துரந்தர் 2
கடந்த ஆண்டு இந்திய திரையுலகின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக துரந்தர் அமைந்தது. துரந்தர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட மூன்று மாதங்களில் துரந்தர் 2 வெளிவந்துள்ளது.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் என பலரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான துரந்தர் 2 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
வசூல்
இந்த நிலையில், 8 நாட்களில் உலகளவில் துரந்தர் 2 செய்துள்ள வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 1055 கோடி வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் துரந்தர் 2-வின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு என்று.






