71 வயது இளைஞன் நடிகர் சரத்குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

71 வயது இளைஞன் நடிகர் சரத்குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா


சரத்குமார்

தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் சரத்குமார். இவர் தனது திரை வாழ்க்கையில் இதுவரை 150 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.

சூர்யன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா, சமுத்திரம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

மேலும் தயாரிப்பாளராக 10க்கும் மேற்பட்ட படங்களை சரத்குமார் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தலைமகன் எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 3BHK திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

சொத்து மதிப்பு

நடிகர் சரத்குமார் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. 71 வயது ஆனாலும் இளைஞனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன.

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சரத்குமாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 35 கோடி முதல் ரூ. 40 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *