7வது வார டிஆர்பியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் எவை?- முழு விவரம் இதோ

7வது வார டிஆர்பியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் எவை?- முழு விவரம் இதோ


வந்ததே டிஆர்பி, வியாழக்கிழமை வந்ததும் சின்னத்திரை கலைஞர்கள் இதனை எதிர்ப்பார்க்கிறார்களோ இல்லையோ, மக்கள் அதிகம் பார்க்கிறார்கள்.

கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை.
பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக எந்த ஒரு தொலைக்காட்சி கதைக்களமும் கடந்த வாரம் அமையவில்லை என்றே கூறலாம்.

சரி மற்றதை பற்றி பேசாமல் நேராக டிஆர்பி பக்கம் செல்லலாம்.

7வது வார டிஆர்பியில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்கள் எவை?- முழு விவரம் இதோ | Week 7 Serials Top 5 Trp Ratings Details

சிங்கப்பெணணே
9.62 பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அன்பு-ஆனந்தி-மகேஷ் முக்கோண காதல் கதையில் ஒவ்வொரு வாரமும் நிறைய திருப்பங்களோடு கதை சென்று கொண்டிருக்கிறது.

மூன்று முடிச்சு
9.57 பெற்று 2ம் இடத்தில் உள்ளது. சூர்யாவிற்கு போதை தெரிய கூடாது என்று ஏதேதோ செய்து வந்த நந்தினிக்கு கடைசியில் ஏமாற்றம் நடந்துள்ளது.

கயல்
தனது தங்கையை அவரது கணவருடன் எப்படி சேர்த்து வைப்பது, அண்ணனுக்கு தொழிலில் முன்னேற்றம் நடக்க என்ன செய்வது என இப்படியான கதைக்களத்துடன் கயல் செல்கிறது. 9.39 பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

மருமகள்
ஹனிமூன் சென்ற இடத்தில் சில சூழ்ச்சியால் ஜெயிலில் சிக்கும் ஆதிரை எப்படி வெளியே வருகிறார் என்பது கதையாக நகர்கிறது. இந்த தொடர் 8.29 பெற்று 4வது இடத்தில் உள்ளது.


சிறகடிக்க ஆசை
8.21 பெற்று 5வது இடத்தில் இருக்கும் இந்த தொடரின் கதைக்களத்தில் வழக்கம் போல் விஜயா-மீனா-ரோஹினி கலாட்டாவோடு கதைக்களம் நகர்கிறது.  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *