3 வருடம் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் கைது.. எந்த ஊரில் இருந்தார் பாருங்க

நடிகை மீரா மீதுன் சில வருடங்களுக்கு முன்பு ட்விட்டரில் பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வம்பில் மாட்டியவர். தன்னை சூப்பர் மாடல் என கூறிக்கொண்ட அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
மீரா மீதுன் மூன்று வருடங்களுக்கு முன்பு பட்டியலிந்தவர்கள் பற்றி அவதூராக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவர் ஜாமினில் வெளியில் வந்த நிலையில் அதன் பிறகு கோர்ட்டுக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார்.
டெல்லியில் கைது
இந்நிலையில் மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி மீரா மிதுன் டெல்லியில் தலைமறைவாக இருந்த நிலையில் அங்கு கைது செய்யப்பட்டார். அவரை விரைவில் சென்னைக்கு அழைத்துவர போலீசார் நடவடிக்கையில் இருக்கின்றனர்.