2007ஆம் ஆண்டு வெளிவந்த அஜித்தின் பில்லா படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

பில்லா
1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் பில்லா. இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது என்பது வரலாறு. இதன்பின் 27 ஆண்டுகள் கழித்து இப்படத்தை ரீமேக் செய்து நடித்தார் அஜித்.
இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது இப்படம்.
படத்தின் மொத்த வசூல்
இன்றுடன் இப்படம் வெளிவந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், 18 ஆண்டுகளை கடந்திருக்கும் பில்லா திரைப்படம் 2007ஆம் ஆண்டு எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளிவந்த ஆண்டு ரூ. 47 முதல் ரூ. 49 கோடி வரை வசூல் செய்துள்ளது.






