2 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

யூத்
அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். இதன்பின், வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து கென் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் யூத். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் சுராஜ், தேவதர்ஷினி, நளினி, அனிஷ்மா அனில்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடித்திருந்தனர்.
2 நாட்கள் வசூல்
நகைச்சுவை, எமோஷன், காதல் என முழு என்டர்டைனிங் படமாக யூத் இருந்தது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் யூத் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






