ஹீரோவான KPY பாலா.. டீஸர் மூலம் ட்ரோல்களுக்கு பதிலடி

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக கலந்து கொண்டு ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தவர் பாலா. கலக்கப்போவது யாரு தொடங்கி குக் வித் கோமாளி வரை அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது காமெடியால் மக்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
மேலும் சில படங்களிலும் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு வறுமையில் இருக்கும் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். அதற்காக அவருக்கு பாராட்டுகளும் குறைந்து வருகிறது.
ஹீரோவாக அறிமுகம்
இந்நிலையில் தற்போது பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அந்த படத்திற்கு காந்தி கண்ணாடி என பெயரிடப்பட்டு இருக்கிறது.
தற்போது அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி இருக்கிறது. டிவியில் பார்ப்பதே பெருசு, இதுல தியேட்டர்ல வந்து இந்த முகத்தை பார்க்க வேண்டுமா என சிலர் ட்ரோல் செய்வதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டீசரில் இருக்கும் வசனம் இருக்கிறது.
இதோ பாருங்க.