வெயில் படத்தில் செய்த தவறு.. 19 வருடம் கழித்து மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்

இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருப்பதும் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக காட்டியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக கூறி இருக்கிறார் அவர்.
மன்னிப்பு
இயக்குனர் பா.ரஞ்சித் வரும் முன்பு தமிழ் சினிமாவில் சாதி பற்றிய பார்வை வேறு மாதிரி இருந்தது.
பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என கூறி இருக்கிறார் அவர்.