வெப் சீரிஸில் நடிக்கும் விஜய் சேதுபதி.. இயக்குனர் இவர்தான்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் படுபிஸியான நடிகர்களில் ஒருவர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடிக்கிறார். அது மட்டுமின்றி டிவி தொகுப்பாளராகவும் அவர் இருந்து வருகிறார்.
அவர் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது.
சமீபத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்து இருந்த தலைவன் தலைவி படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலையும் குவித்து இருந்தது.
வெப் சீரிஸ்
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஒரு ஹாட்ஸ்டார் வெப் சீரிஸில் நடிக்க தொடங்குகிறார்.
காக்கா முட்டை, கடைசி விவசாயி பட புகழ் இயக்குனர் மணிகண்டன் தான் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்.
ஜாக்கி ஷ்ரோப் ஒரு முக்கிய் ரோலில் நடிக்கிறார்.
முத்து என்கிற காட்டான் என டைட்டில் உடன் வந்திருக்கும் போஸ்டர் இதோ.