விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்
தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த பாண்டியன் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தார்கள். இந்த விஷயத்தை கேட்டவுடன் கோமதி உடனடியாக தங்கமயிலை நேரில் சென்று சந்தித்து பேசினார்.
மறுபக்கம், சரவணன் தனது பிள்ளையை தான் வளர்ப்பேன் என்றும், தங்க மயிலை விவாகரத்து செய்துவிட்டு, அஞ்சலியை திருமணம் செய்துகொள்வேன் என்றும் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
அதிரடி முடிவு
இந்த நிலையில், சரவணன் – தங்கமயில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வர, சரவணன் தனது முடிவில் இருந்து கொஞ்சமும் மாறாமல், தங்கமயிலிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிபதியிடம் கூறிவிட்டார்.
முதலில் இருந்தே தனக்கு விவாகரத்து வேண்டாம், தான் சரவணனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி வந்த தங்கமயில், தற்போது தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறிவிட்டார். இதை கேட்டவுடன் சரவணன் மட்டுமின்றி கோமதியும் அதிர்ச்சியடைகிறார்.
தனது கணவரின் துணை இல்லாமல் பிள்ளையை பெற்று வளர்த்து காட்டுகிறேன் என முடிவு செய்துள்ளார் தங்கமயில்.






