விவரிக்க முடியாத உறவு அது.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்… யாரைப்பற்றி கூறுகிறார்?

விவரிக்க முடியாத உறவு அது.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்… யாரைப்பற்றி கூறுகிறார்?


ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் திரைப்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

விவரிக்க முடியாத உறவு அது.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்... யாரைப்பற்றி கூறுகிறார்? | Aishwarya About Her 20 Years Of Friendship

3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. இப்படம் வெளிவந்த சமயத்தில் பேசப்படவில்லை என்றாலும், தற்போது இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா உருக்கம்

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் அவருக்கு இருக்கும் 20 வருட நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில், ” பொதுவாக நான் எந்த இடத்திற்கும் செல்லமாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுவேன். எங்கள் உறவு குறித்து விவரிக்க முடியாது எனக்காக எப்போதும் அவர் வந்து நிற்பார்.

விவரிக்க முடியாத உறவு அது.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்... யாரைப்பற்றி கூறுகிறார்? | Aishwarya About Her 20 Years Of Friendship

எங்களுடையது 20 வருட நட்பு. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் அக்காவுக்கு தான் முதலில் போன் பண்ணி பேசுவேன்.

பார்க்க தான் அக்கா சீரியஸ் ஆன ஆள் மாதிரி இருப்பாங்க. அவர்களின் சிரிப்பு அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் சிரிக்க மாட்டாங்க. அவங்க இன்னும் நிறைய சிரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *