வித் லவ் படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வித் லவ் படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


வித் லவ்

காதல் கதைக்களத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவந்த படம் வித் லவ். இப்படத்தின் மூலம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி படம் மாபெரும் வெற்றிபெற்றது என்பதை நாம் அறிவோம். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை இயக்குநராக பதிவு செய்த அபிஷன், தற்போது வித் லவ் படத்தின் மூலம் அறிமுக ஹீரோவாகவும் வெற்றியடைந்துள்ளார்.

இறுதி வசூல் 

இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை தயாரித்திருந்தார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் வித் லவ் படம் உலகளவில் ரூ. 29 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூலாகும்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *