விடுதலை 1 மற்றும் 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

விடுதலை 1 வசூல்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை 1.
2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர். உலகளவில் இப்படம் ரூ. 58 கோடி வசூல் செய்திருந்தது.
விடுதலை 2 வசூல்
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த விடுதலை இரண்டாம் பாகம், சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் 15 நாட்களை கடந்துள்ள விடுதலை 2 திரைப்படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் முதல் பாகத்தை விட அதிக வசூலை இரண்டாம் பாகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.