விஜய் பாடல்களை பயன்படுத்த தடை.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அரசியலுக்கு சென்றுவிட்டதால் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி என விஜய் அறிவித்து இருக்கிறார். அந்த படம் சென்சார் சிக்கல்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே திமுக-வை தான் அதிகம் விமர்சித்து வருகிறார். அதனாலேயே சன் டிவியில் விஜய்யின் படங்கள், பாடல்கள் என எதுவும் ஒளிபரப்பாவதில்லை என ரசிகர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாடல்கள் பயன்படுத்த கூடாது
இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடக்கும்போது அதில் விஜய்யின் பாடல்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டு இருக்கிறதாம். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்க்கனவே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்கள் விசில் (விஜய்யின் கட்சி சின்னம்) கொண்டு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






