விஜய் டிவியின் தென்றலே மெல்ல பேசு தொடரின் ஆரம்பம் எப்போது?.. வெளிவந்த விவரம்

விஜய் டிவி
விதவிதமான கதைக்களத்தை கொண்டு தொடர்கள் ஒளிபரப்புவதில் சன் டிவி டாப்பில் இருப்பவர்கள்.
அவர்களை தாண்டி இப்போது விஜய் டிவியும் நிறைய வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய தொடர்
சமீபத்தில் பூங்காற்று திரும்புமா என்ற சீரியல் விஜய் டிவியில் புதியதாக தொடங்கப்பட்டது. சந்தேகப்படும் கணவனிடம் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணின் கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் தான் தென்றலே மெல்ல பேசு. கடந்த சில நாட்களாக இந்த சீரியலின் சில புரொமோக்கள் வெளியாகி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில் இன்று ஜுன் 9 முதல் மதியம் 2.30 மணிக்கு இனி ஒளிபரப்பாக உள்ளதாம்.