ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்… இத்தனை கோடியா, அடேங்கப்பா…

இராமாயணம்
வரலாற்று கதைகள், நிஜ கதைகள், நாவல், வாழ்க்கை வரலாறு போன்ற விஷயங்களை மையப்படுத்தி நிறைய படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகியுள்ளது. அப்படி விரைவில் தெய்வீக கதையான இராமாயணம் தயாராகியுள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு இப்பட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது, அவதார், இன்டர்ஸ்டெல்லர் போன்ற படங்களுக்கு VFX செய்த DNEG நிறுவனம் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்களாம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீஸர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளியாகி பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், 2027ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது.
சம்பளம்
ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு தரமான இசை கொடுக்க உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இந்த பிரம்மாண்ட படத்தின் இசையமைப்பிற்காக ஏ.ஆர். ரகுமான் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.






