ரூ. 10 கோடி செலவு, ரூ. 100 கோடி சம்பாதித்த நடிகை மீனா… எப்படி தெரியுமா?

நடிகை மீனா
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நடிகை மீனா.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இப்போது மலையாளத்தில் செம ஹிட் படமான த்ரிஷ்யம் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார், விரைவில் படமும் வெளியாக இருக்கிறது.
படங்கள், போட்டோ ஷுட், சுற்றுலா என தனது வாழ்க்கையை கழித்து வருகிறார்.
பணம் லாபம்
இந்த நிலையில் நடிகை மீனாவின் ஸ்மாட் பிசினஸ் பற்றிய தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது பெரிய தொகையாக கருதப்பட்ட ரூ. 10 கோடியை வங்கியில் கடன் வாங்கி தமிழ்நாட்டில் பாரம்பரிய பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.
பாரம்பரிய கட்டிடக்கலை, மரத் தூண்கள், நடுமுற்றம் என பழமையான கலை நயத்துடன் அந்த வீடு அமைந்திருந்தது.
தற்போது மீனாவின் வீட்டின் அழகில் மயங்கிய அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சுமார் ரூ. 100 கோடி கொடுத்து மீனாவின் வீட்டை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






