ராஷ்மிகா திருமண வீடியோ இத்தனை கோடியா? நயன்தாராவை விட பல மடங்கு கொடுக்கும் Netflix

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. உதய்பூரில் இருக்கும் பிரமாண்ட அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
திருமணத்தில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ உரிமை..
இந்நிலையில் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் திருமண வீடியோவின் உரிமையை 60 கோடி ரூபாய்க்கு வாங்க நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்வந்து இருக்கிறதாம். ஆனால் அதை விற்பனை செய்ய விஜய் தேவரகொண்டா ஒப்புக்கொள்ளவில்லையாம். வாழ்க்கையின் முக்கிய தருணத்தை private ஆகவே வைத்துக்கொள்ள விரும்புவதால் இந்த முடிவு என தெரிகிறது.
நடிகை நயன்தாரா திருமண வீடியோவுக்கு 25 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தது நெட்பிலிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.






