ராம் இயக்கத்தில் வெளிவந்து செம ஹிட்டான பறந்து போ படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

பறந்து போ
தமிழ் சினிமாவில் வருடா வருடம் படம் கொடுக்கும் இயக்குனர்கள் உள்ளார்கள்.
ஆனால் வருடங்கள் ஆனாலும் தரமாக மக்கள் அதிகம் பேசும் படமாக கொடுக்க வேண்டும் என படங்கள் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் ராம்.
கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற அழுத்தமான கதைகளை கொண்ட படங்களை இயக்கிய ராம் கடைசியாக பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கடந்த ஜுலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சிவா, அஞ்சலி, மிதுல் ரயான், கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 2025ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய 5வது தமிழ் படமாக அமைந்துள்ளது.
மொத்தமாக இப்படம் ரூ. 12 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ஹாட் ஸ்டாரிலும் வெளியாகவுள்ளது.