ரஷ்யா ஒப்புக்கொண்டால் உக்ரைனுக்குள் சமாதான படைகளை அனுப்ப தயார்: ஜேர்மனி

ரஷ்யா ஒப்புக்கொண்டால் உக்ரைனுக்குள் சமாதான படைகளை அனுப்ப தயார்: ஜேர்மனி


உக்ரைனுக்குள் சமாதான படைகளை அனுப்ப ஜேர்மனி தயாராக உள்ளது.

உக்ரைனில் போர்நிறுத்தத்திற்குப் பின் சமாதான படைகளை அனுப்ப ஜேர்மனி தயார் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) அறிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு உக்ரைனும் ரஷ்யாவும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இப்போது உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் இருக்கும் வரை எந்த முடிவும் எடுக்கமுடியாது. இதில் பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை, அதனால் போர்நிறுத்தமும் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Russia Ukraine War, Germany, Germany ready to send peacekeepers to Ukraine, Russia

ஆனால் போர்நிறுத்தம் ஏற்பட்டால், மேற்கத்திய நாடுகள், நேட்டோ கூட்டணி, ஐக்கிய நாடுகள் சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இதைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

அப்போது, ஜேர்மனி ஐரோப்பாவின் மிகப்பாரிய பொருளாதார நாடாக இருப்பதால், முக்கியமான பங்கு வகிக்க நேரிடும் என அவர் கூறினார்.

Russia Ukraine War, Germany, Germany ready to send peacekeepers to Ukraine, Russia

இந்நிலையில், கிழக்குக் ஜேர்மனி மக்களின் 67% உக்ரைனில் ஜேர்மன் படைகளை அனுப்ப எதிர்ப்பு தெரிவிக்க, 25%மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம், மேற்குக் ஜேர்மனியில், 49% மக்கள் எதிர்ப்பாகவும், 37% மக்கள் ஆதரவாகவும் உள்ளனர்.


அதே நேரத்தில், அரசியல் குழுக்கள் மற்றும் மக்களின் கருத்து வேறுபாடுகள் இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளன.


இதனால், ஜேர்மனியின் சமாதான படைகளின் அனுப்புவது தொடர்பான முடிவுக்கு இன்னும் நேரம் இருப்பதாக கூறப்படுகிறது.

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia Ukraine War, Germany, Germany ready to send peacekeepers to Ukraine, Russia


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *