ரஜினி 173 மீண்டும் இயக்குனர் மாற்றமா? சென்சேஷன் இயக்குனரை கமிட் செய்தார்களா

ரஜினி 173
கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் திரைப்படம் ரஜினி 173. இப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது.
ஆனால், திடீரென அவர் இப்படத்திலிருந்து விலகினார்.
இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்த நிலையில், இதன்பின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கப்போகிறார் என்கிற அறிவிப்பை வெளியிட்டனர்.
ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்பது போல் தகவல்கள் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
புதிய இயக்குநர்
இந்த நிலையில், தற்போது இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ரஜினி 173 திரைப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்க கமிட்டாகியுள்ளாராம்.
இவர் ஏற்கனவே ரஜினிகாந்தை சந்தித்து அவருக்கு கதை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான அறிவிப்பு ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






