ரஜினி வீட்டில் பொங்கல்.. ப்ளேட்டை ஸ்பூனால் தட்டி கொண்டாடிய சூப்பர்ஸ்டார்! வீடியோவை பாருங்க

இன்று பொங்கல் விழாவை தமிழர்கள் விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்களும் வீட்டில் பொங்கல் வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு இன்று ரசிகர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர். அவர்களை நேரில் சந்தித்து ரஜினி பொங்கல் வாழ்த்து கூறி இருந்தார்.
வீடியோ
தனது மகள்கள், மருமகன், பேரன்கள் உடன் ரஜினி குடும்பமாக சேர்ந்து வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார்.
பொங்கல் பொங்கும்போது பிளேட்டில் ஸ்பூனால் தட்டி ரஜினி மற்றும் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். வீடியோவை பாருங்க.






