ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் தகவல்

ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் தகவல்

ரஜினிகாந்த் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் தகவல் | Thalaivar 173 Movie Heroines Update

ஜெயிலர் 2 படத்தை முடித்த கையோடு இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் தகவல் | Thalaivar 173 Movie Heroines Update

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி173 படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் கமிட்டாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே – பிரியங்கா

அதில் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன், மற்றொருவர் நடிகை பூஜா ஹெக்டே என கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே ஏற்கனவே ரஜினியின் கூலி திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

ஆனால், இவை யாவும் தற்போது திரை வட்டாரத்தில் உலா வரும் தகவல் மட்டுமே. அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று.

ரஜினி படத்தில் இணையும் இரண்டு முன்னணி நடிகைகள்.. லேட்டஸ்ட் தகவல் | Thalaivar 173 Movie Heroines Update

தனது 173வது திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இது ரஜினியின் 174வது படமாகும். இப்படத்தை நெல்சன் இயக்க ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நாளை இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகும் என என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *