ரஜினி, கமல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. கே.எஸ். ரவிக்குமார் சொன்ன ரகசியம்

கே.எஸ். ரவிக்குமார்
தமிழ் சினிமாவின் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை, முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு போன்ற பல படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இன்ப அதிர்ச்சி
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சில அசத்தலான தகவலை பகிர்ந்துள்ளார் ரவிக்குமார்.
அதில், ” ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் விரைவில் ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ரஜினி மற்றும் கமலை இணைத்து படம் இயக்க தயாராக உள்ளதாக” கூறியுள்ளார். தற்போது இந்த புது தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.






