ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லையா? வெளிவந்த லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ்
கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணையும் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என கூறப்பட்டது.
அதன்பின், ரஜினி – கமல் இணைவது உறுதி ஆனால், படத்தின் இயக்குனர் யார் என்பதை உறுதி செய்யவில்லை என தகவல் வெளிவந்தது. இதை ரஜினியும் கூறியிருந்தார்.
கைதி 2
இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தைதான் இயக்கப்போகிறாராம். LCU எங்கு துவங்கியதோ, அதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறாராம்.
இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருந்த நிலையில், இது மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளிவரவில்லை.
அதேபோல் ரஜினி – கமல் படத்தை இவர்தான் இயக்கப்போகிறாரா என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






