ரஜினியை பார்த்து பயந்த ஷங்கர்.. பிரபல இயக்குநர் கொடுத்த அட்வைஸ்

ரஜினி
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவர் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வெளிவரவுள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவரவுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினிக்கு தரமான ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். அவரே முதல் முறையாக ரஜினியுடன் பணிபுரியும் போது மிகவும் பயந்துள்ளார். அந்த சம்பவம் குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
பயந்த ஷங்கர்
“ஷங்கர் ‘சிவாஜி’ படம் பண்ணும் போது என்கிட்ட, சார் நீங்க ரஜினி சாரை வைத்து நிறைய படம் பண்ணிட்டீங்க. அவர் எப்படி சார், நீங்க சொல்லிட்டீங்கனா அவர் கோச்சுக்காத மாதிரி நான் நடந்துப்பேன் என்று சொன்னார். அதற்கு நான் அதெல்லாம் ஒன்னும் கிடையாது, ஒரு சின்ன ஆர்டிஸ்ட் வைத்து எடுத்தால் என்ன பண்ணுவியோ அந்த மாதிரி சின்சியரா பண்ணு, அதே மாதிரி அவரும் சின்சியரா பண்ணுவாரு என்று சொன்னேன். அப்புறம் ஷூட்டிங் அப்போ ஷங்கர் கிட்ட, ரஜினி சார் எப்படிப்பா என்று கேட்டேன். அதற்கு அவர் தங்கம் சார், அநியாயத்துக்கு தங்கம் சார் என்று சொன்னாரு” என கூறியுள்ளார்.