ரஜினிக்கு நீங்க தான் மனைவி.. ஏமாற்றப்பட்ட பிரபல நடிகை, என்ன ஆனது?

ரஜினிக்கு நீங்க தான் மனைவி.. ஏமாற்றப்பட்ட பிரபல நடிகை, என்ன ஆனது?


ஜெயிலர்  

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர்.

மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது.

ரஜினிக்கு நீங்க தான் மனைவி.. ஏமாற்றப்பட்ட பிரபல நடிகை, என்ன ஆனது? | Actress About Got Cheated

என்ன ஆனது? 

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகையிடம் பணம் பறிக்க மோசடி முயற்சி நடந்து இருக்கிறது. இது குறித்து அந்த நடிகை தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

ரஜினிக்கு நீங்க தான் மனைவி.. ஏமாற்றப்பட்ட பிரபல நடிகை, என்ன ஆனது? | Actress About Got Cheated

அதில், ” ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்க நான் செலக்ட் ஆகி இருப்பதாக கூறி எனது வாட்ஸ் ஆப்க்கு மெசேஜ் வந்தது. பின் என்னிடம் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் கார்டு இருக்கிறதா? என்று கேட்டனர்.

நான் இல்லை என்று கூற உறுப்பினர் அட்டை பெற வேண்டும் என்றால் ரூ.12,500 உடனே அனுப்ப வேண்டும் என்று கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த நான் என் மற்ற நண்பர்களிடம் இது குறித்து கேட்டேன். அப்போது தான் என்னை ஏமாற்றுகிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது” என்று கூறியுள்ளார்.    


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *