ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட்

பிச்சைக்காரன்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார். இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் வசூல் குவிந்தது.

பிச்சைக்காரன் 2 படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிச்சைக்காரன் 3 – ம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்தனர்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட் | Vijay Antony Movie Update Details

எப்போது?

இந்நிலையில், சமீபத்தில் நடந்த மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், ‘பிச்சைக்காரன் 3’ குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “பிச்சைக்காரன் 3 படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இப்படம் இருக்கும்.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் பிச்கைக்காரன் 3 படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பிச்சைக்காரன் 3 எப்போது?.. விஜய் ஆண்டனி கொடுத்த அதிரடி அப்டேட் | Vijay Antony Movie Update Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *