ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் பகத் பாசில் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

பகத் பாசில்
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பகத் பாசில்.
தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோவாக வலம் வந்த இவர் 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து, பகத் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று தனது 43 – வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் பகத் பாசில் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பகத் பாசிலின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.