ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. காரணம் இதுதானா?


Is this the reason behind Rakul Preet Singh’s IT raid?: இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதற்கான காரணம் இதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.



நடிகை ரகுல் ப்ரீத் சிங்


இந்திய அளவில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் வெளியான அயலான், இந்தியன் 2, என்.ஜி.கே, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், அடுத்ததாக இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ராமாயணா திரைப்படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளிவந்தபோது, இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. காரணம் இதுதானா? | Is This Reason Behind Rakul Preet Singh It Raid


வருமான வரித்துறையினர் சோதனை


கடந்த 28-ஆம் தேதி வருமான வரித்துறையினர் மும்பையில் உள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவரது மாமனார் வாசு பக்னானி மற்றும் அவருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான பேனோரமா ஸ்டூடியோவுடன் தொடர்புடைய 12 இடங்களில் திடீரென சோதனை நடத்தினார்கள். திரைப்படங்களுக்கான முதலீடு, வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான நிதியுதவிகள் உள்பட இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. காரணம் இதுதானா? | Is This Reason Behind Rakul Preet Singh It Raid



போதைப்பொருள்விவகாரம்



வருமான வரித்துறை சோதனை ஒரு பக்கம் இருக்க, கடந்த 2021-22-ஆம் ஆண்டுகளில் தெலுங்கு திரையுலகை உலுக்கிய போதைப்பொருள் விவகாரத்தில் அமலாத்துறையால் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் ரகுலின் சகோதரர் அமன் மீது மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.. காரணம் இதுதானா? | Is This Reason Behind Rakul Preet Singh It Raid

இந்த நிலையில், இதன் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தொடர்ப்பு இருக்கிறதா? சினிமா தயாரிப்பு என்கிற பெயரில் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் நிதி முறைகேடு நடந்துள்ளதா? என்கிற கோணத்தில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை திரையுலகினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *