யோகா செய்கிறேன் பாரு என வடிவேலு செய்த அட்ராசிட்டி! வைரலாகும் வீடியோ

நடிகர் வடிவேலுவின் காமெடி எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் சமீப காலமாக காமெடியனாக நடிப்பதில்லை என்றாலும் அவரது பழைய காமெடி காட்சிகள் தான் இன்னும் டிவி சேனல்கள் மற்றும் இணையத்தில் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
வடிவேலு தற்போது படங்களில் குணச்சித்திர ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
யோகா வீடியோ
இந்நிலையில் வடிவேலு தற்போது நடிகர் பிரபுதேவா உடன் யோகா செய்யும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
பிரபுதேவா யோகா செய்வதை பார்த்து அப்படியே செய்ய முயற்சிக்கிறார் வடிவேலு, ஆனால் அவர் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை பிரபுதேவா தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
வீடியோவை பாருங்க.
“தை பிறந்தால் வழி பிறக்கும்.
உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும்.”“இப்படிக்கு, புயலும் புயலும்.”
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾✨ pic.twitter.com/dqsZ0zn5zZ
— Prabhudheva (@PDdancing) January 15, 2026






