முஸ்தபா முஸ்தபா திரை விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா திரை விமர்சனம்


சதீஷ், சுரேஷ் ரவி நடிப்பில் ப்ரவீன் சரவணன் இயக்கத்தில் காமெடி களத்தில் வெளிவந்துள்ள முஸ்தபா முஸ்தபா அவர்கள் நினைத்தது போல் ரசிகர்களை சிரிக்க வைத்த்தா? பார்ப்போம்.

கதைக்களம்

சதீஷ் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை பார்க்கிறார். TRP இல்லாத அந்த சேனலில் எதாவது அழகான பெண்ணை வைத்து ஷோ நடத்தினால் நல்ல ரீச் இருக்கும் என ப்ளான் செய்கின்றனர்.

அதை தொடர்ந்து ஒரு டாக்டர் வைத்து ஷோ செய்ய, அந்த டாக்டர் படத்தின் நாயகி மோனிகா அவரை பார்த்ததுமே சதீஷுக்கு பிடித்து போகிறது.

இதனால் அவரை இம்ப்ரஸ் செய்து திருமணம் வரை செல்ல, தான் டீ டோட்டலர் என சொல்லி காதலித்து, குடித்து கும்மாளம் அடித்து நாயகி மோனிகாவிடம் மாட்டிகொள்கிறார்.

பிறகு பிரிவு, கெஞ்சல் என சென்று மீண்டும் இவர்கள் இணைந்து திருமணத்திற்கு ரெடியாக, சதீஷ் ஒரு பெண்ணுடன் தனி ஒரு ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகிறது .

அந்த வீடியோ ஒரு படத்தின் ஷுட்டிங், ஒரே நாளில் அந்த படம் நின்றது என சதீஷ் என்ன சொன்னாலும், எப்படியாவது தன் காதலி பார்ப்பதற்குள் நண்பர்களுடன் இணைந்து எப்படி அந்த வெப்சைட்டில் இருந்து சதீஷ் அந்த வீடியோவை டெலிட் செய்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சதீஷ் மாஸ் ஹீரோவாக எல்லாம் முயற்சி செய்யாமல், தனக்கு என்ன வருமோ அதை தெரிந்து சிம்பிள் கதையில் ஜாலியான களத்தை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருவதே இவரின் ப்ளஸ் ஆக உள்ளது. இந்த படத்திலும் சதீஷ் அதை சிறப்பாகவே செய்துள்ளார்.

சதீஷ் மற்ற படத்தில் ஹீரோவுடன் சுற்றும் நண்பனாக வர, இந்த படத்தில் சதீஷின் நண்பனாக சுரேஷ் ரவி அவரும் செம கலகலப்பாக கவுண்டர் வசனத்துடன் ஸ்கோர் செய்கிறார்.

இதை தாண்டி கருணாகரன், ஐஸ்வர்யா தாத்தா, ஒரு டைரக்டர் கதாபாத்திரம், புகழ், சுகுமார் என அனைத்து கதாபாத்திரங்களுமே ஜாலியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

அந்த மாதிரி வீடியோ லீக். அதை காதலி பார்க்காமல் அழிக்க வேண்டும் என கான்செப்ட் ஒரு விறுவிறுப்பான காமெடி களத்தை உருவாக்கி விடுகிறது. அதிலேயே டீம் பாஸ் மார்க் வாங்கி விடுகின்றனர்.

ஆனால், களம் இருந்தும் காமெடி இருந்தும் அதில் ஒரு சில காமெடி மட்டுமே தான் க்ளிக் ஆகிறது, அதிலும் முதல் பாதி காதல் காட்சிகளே கொஞ்சம் நீண்டது கதைக்கு தேவையா என்பது போல் இருந்தது.
 

ஆனால், இரண்டாம் பாதியில் முடிந்த அளவிற்கு அதை மேட்ச் செய்து எப்படியே கரே சேர்ந்து விடுகின்றனர். அதே நேரத்தில் இந்த மாதிரி படத்தில் குழப்பம் அதிகமாக இருக்க வேண்டும், அதை சரி செய்து செல்வதே விறுவிறுப்பை தரும், அந்த குழப்பம் டுவிஸ்ட் எல்லாம் வைக்க வேண்டும் என்பதற்காகவே இருப்பது போல் இருந்தது.

டெக்னிக்கல் ஒர்க் கேமரா ஒர்க் டீசண்ட், இசை கொஞ்சம் இறைச்சல் கம்மியாகி இருக்கலாம்.
 

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி

சதீஷ், சுரேஷ் ரவி, கருணாகரன் காம்போ

பல்ப்ஸ்

முதல் பாதி பல இடங்களில் க்ளிக் ஆகாத காமெடி.

மொத்தத்தில் இந்த முஸ்தபா முஸ்தபா விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை என்றாலு, சிரிக்கவே முடியாத அளவுக்கு மோசமும் இல்லை.

ரேட்டிங்: 2.5/5
 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *