முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ

முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ

சினிமாவில் தற்போது நடிகர்களுக்கு நிகராக நடிகைகளும் கோடிகளில் சம்பளம் பெற்று வருகின்றனர். அந்த வகையில், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம். 

சாய் பல்லவி: 

ப்ரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் ஒரு படத்திற்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை வாங்கி தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் நடிகையாக ஜொலித்து வாருகிறார்.

முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ | Highest Salary Actress In South Cinema List

நயன்தாரா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2. மேலும், பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். தற்போது, இவர் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி முதல் ரூ. 18 கோடி வரை வாங்கி வருகிறார்.

முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ | Highest Salary Actress In South Cinema List

ராஷ்மிகா: 

புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளார் ராஷ்மிகா. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக சிக்கந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும், தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 

முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ | Highest Salary Actress In South Cinema List

த்ரிஷா:

கடந்த ஆண்டு அதிகம் சம்பளம் பெற்ற நடிகைகளில் நம்பர் 1 இடத்தை பிடித்த த்ரிஷா தற்போது 4 – வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழில் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். ஒரு படத்திற்கு மட்டும் சுமார் ரூ. 10 கோடி முதல் சம்பளம் பெற்று வருகிறார். 

 முதல் இடத்தில் நயன்தாரா இல்லை.. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட் இதோ | Highest Salary Actress In South Cinema List

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *