மீனா பணத்தை திருட ரோஹினி செய்த கேவலமான வேலை, இப்படியா செய்வது.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதா-அருண் திருமண விசேஷ கதைக்களம் தான் செல்கிறது.
முத்து-மீனா வீட்டிற்கு வர அண்ணாமலை தன்னிடம் உள்ள பணத்தை சீதா திருமணத்திற்கு தருகிறார். வழக்கம் போல் விஜயா எதிர்ப்பு தெரிவிக்க அப்படி சில வாக்குவாதம் நடக்கிறது.
ரவி சமையல் விஷயத்தை மொத்தமாக தானே கவனித்துக் கொள்கிறேன் என கூற ஸ்ருதி நகை வாங்கி கொடுக்கிறேன் என கூறுகிறார்.
ரோஹினி மேக்கப் வேலைகளை தான் கவனித்துக் கொள்கிறேன் என்கிறார்.
பின் வழக்கம் போல் ரோஹினிக்கு பண மிரட்டல் வர அவர் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.
புரொமோ
PA பணம் கேட்டு ரோஹினியை மிரட்ட அவர் ஒரு பிளான் போட்டுவிட்டதாக தெரிகிறது. அதாவது நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா வீட்டில் உள்ள பணத்தை திருட ரோஹினி PAவை வீட்டிற்கு வரச்சொல்லி இருப்பதாக தெரிகிறது.
வீட்டில் உள்ள அனைவரும் வெளியேற PA சாமி ரூமில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு வெளியே வர மனோஜ் பார்க்கிறார். அடுத்து என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.