மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா… சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
முத்து-மீனா என்ற நல்ல குணம் உள்ள ஒரு ஜோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார எபிசோடின் புரொமோவில், முத்து-மீனா, சீதாவை பார்த்து என் இந்த சண்டை என பேச போக அப்போது முத்து-அருண் குறித்து கொஞ்சம் அதிகமாக பேசிவிடுகிறார்.
அப்போது அருண் என்ட்ரி கொடுக்க முத்து அவர் இருப்பதை முன்பே சொல்ல வேண்டாமா என கேட்கிறார்.
எபிசோட்
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் உள்ளது. அதாவது எபிசோட் ஆரம்பத்தில் மீனா தனது பூ தொழிலுக்கு புதிய ஆப் தொடங்கி அதன்மூலம் தொழில் செய்ய பிளான் போடுகிறார்.
MM Flowers என்ற பெயரில் ஆப் தொடங்கலாம் என மீனா கூற அதற்கான வேலையை நான் செய்து தருகிறேன் என ஸ்ருதி கூறுகிறார்.
பின் விஜயா, ஸ்ருதி அம்மா-அப்பா பேசிய விஷயத்தை ரவியிடம் பேசுகிறார், ஆனால் அவரோ என் அப்பா கொடுத்துள்ள படிப்பு போதும் நான் சொந்தமாக உழைத்து தொழில் செய்ய விரும்புகிறேன் என்கிறார்.
விஜயா-ரோஹினி
அண்ணாமலையிடம் முத்து மீனா தொடங்கியுள்ள புதிய தொழில் குறித்து கூற சந்தோஷப்படுகிறார், வழக்கம் போல் மனோஜ் கிண்டல் செய்கிறார். பின் விஜயா பேசுகையில், மீனா ஆன்லைனில் பூ விற்கப்போவதை கேட்டு பாராட்டுகிறார், அதைக் கேட்டதும் அனைவருமே செம ஷாக்.
ஆனால் அதேவேகத்தில் விஜயா, ரோஹினியை தரக்குறைவாகப் பேச ஆரம்பிக்கிறார். நான் யாரெல்லாம் பெருசா வருவாங்கனு நினைச்சேனோ, அதெல்லாம் உதவாக்கறையா வந்திருக்கு, மலேசியா பணக்காரி என்று பச்சையா பொய் சொன்னா.
அப்புறம் நான் சொந்தமா பணக்காரி ஆவேன்னு பில்டப் பண்ணினா, ஒன்னத்தையும் காணோம் என அவரை தாக்கி பேசுகிறார். இதனால் ரோஹினி மிகவும் வருத்தம் அடைகிறார், மனோஜ் அமைதியாக இருப்பதையும் பார்த்து கஷ்டப்படுகிறார்.