மீனாவிடம் மாட்டிக்கொண்ட ரோகிணி, க்ரிஷ்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி பற்றிய மொத்த உண்மைகளும் எப்போது தான் விஜயாவின் குடும்பத்திற்கு தெரியவரும் என்பது நீண்ட காலமாக ரசிகர்கள் கேட்டு வரும் கேள்வி.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது, கிரிஷ் தான் அவரது மகன் என்பது இன்னும் சீக்ரெட் ஆகவே இருந்து வருகிறது.
தற்போது கிரிஷ் விஜயாவின் வீட்டில் இருந்து வரும் நிலையில் இந்த முறையாவது ரோகிணி சிக்குவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறர்ர்கள்.
லேட்டஸ்ட் ப்ரொமோ
இந்நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கும் ஸ்பெஷல் ஒளிபரப்பின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் க்ரிஷ் பாட்டி லக்ஷ்மி விஜயவின் கண்களில் பட்டு விடுகிறார்.
மேலும் ரோகிணியின் தோழியான வித்யாவின் வீட்டுக்கு மீனா செல்கிறார். தனது வண்டி பழுது ஆகிவிட்டது அதை சரி செய்ய மெக்கானிக் கூப்பிட வேண்டுமென சொல்கிறார்.
அப்போது ரோகிணியும் தனது மகன் கிரஷ் உடன் அங்கு தான் இருக்கிறார். மீனா வருவதை பார்த்ததும் அறைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார்.
மீனா வித்யாவிடம் பேசிவிட்டு வெளியில் செல்லும்போது அங்கு கிரிஷ் செருப்பு இருப்பதை பார்த்து விடுகிறார்.
இதன் மூலம் ரோகிணி மீனாவிடம் தற்போது வசமாக சிக்க போகிறார். ப்ரோமோவை நீங்களே பாருங்க.