மீண்டும் ஹிட் கூட்டணி.. சிம்புவின் அடுத்த படம் பற்றி கசிந்த தகவல்

நடிகர் சிம்பு ரசிகர்கள் எல்லோரும் தக் லைப் படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி மோசமான ரெஸ்பான்ஸ் தான் பெற்றது. மேலும் படத்தை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சிம்புவின் அடுத்த படம் பற்றிய முக்கிய தகவல் வந்திருக்கிறது.
மாநாடு 2
சிம்பு – வெங்கட் பிரபு மீண்டும் கூட்டணி சேர இருக்கிறார்கள் எனவும், மாநாடு 2ம் பாகம் கதை தான் அவர் எடுக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். வடசென்னையை மையப்படுத்திய கதை அது. அதை முடித்துவிட்டு தான் மாநாடு 2 படத்தில் சிம்பு நடிப்பார் என தெரிகிறது.