மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகப்போகும் ரஜினியின் செம சூப்பர் டூப்பர் ஹிட் படம்… தெறிக்கும் தகவல்

ரஜினி
எவ்வளவு காலங்கள் ஆனாலும் ரசிகர்களால் மறக்கவே முடியாத படங்கள் பல உள்ளன, அதில் ரஜினி நடித்த படங்கள் நிறைய உள்ளது.
40 வருடங்களுக்கும் மேலாக இளம் நாயகர்களுக்கு டப் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக எப்போதும் டாப்பில் இருக்கும் ரஜினி படங்களில் ரசிகர்களால் மறக்கவே முடியாத படம் என்றால் அது படையப்பா தான்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி செம மாஸ் ஹீரோவாக நடிக்க பயங்கர வில்லியாக நாயகனுக்கு டப் கொடுப்பவராக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ரீ-ரிலீஸ்
கடந்த 1999ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் ஆக்ஷன், எமோஷன், மாஸ் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி வெளியாகி இருந்தது.
ரஜினி, ரம்யா கிருஷ்ணனை தாண்டி சௌந்தர்யா, சிவாஜி கணேசன், நாசர், லட்சுமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
தற்போது இப்படம் ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலாக டிசம்பர் 12ம் தேதி புதிய தொழில்நுட்பத் தரத்துடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாம்.






