மலையாள இயக்குனருடன் சூர்யாவின் அடுத்த படம்.. வாடிவாசல் டிராப் ஆனது உறுதியா?

மலையாள இயக்குனருடன் சூர்யாவின் அடுத்த படம்.. வாடிவாசல் டிராப் ஆனது உறுதியா?


நடிகர் சூர்யா தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். கங்குவா மிகப்பெரிய தோல்வி அடைந்தபிறகு சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் அந்த படமும் கலவையான விமர்சனங்கள் தான் பெற்றது. இருப்பினும் படம் 235 கோடி வசூலுடன் பெரிய லாபம் ஈட்டியதாக சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்தது. அந்த லாபத்தில் 10 கோடியை சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து லக்கி பாஸ்கர் பட புகழ் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் அடுத்து சூர்யா படம் நடிக்கிறார். அதன் ஷூட்டிங்கும் சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதனால் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருந்த வாடிவாசல் படமும் டிராப் ஆகிவிட்டதாக தகவல் வந்தது.

மலையாள இயக்குனருடன் சூர்யாவின் அடுத்த படம்.. வாடிவாசல் டிராப் ஆனது உறுதியா? | Suriya Teams Up With Jithu Madhavan

ஆவேசம் இயக்குனர்

இந்நிலையில் சூர்யா தனது 47வது படத்திற்காக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் உடன் கூட்டணி சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆவேசம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஜித்து மாதவன் – சூர்யா கூட்டணி படம் பற்றி திகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மலையாள இயக்குனருடன் சூர்யாவின் அடுத்த படம்.. வாடிவாசல் டிராப் ஆனது உறுதியா? | Suriya Teams Up With Jithu Madhavan


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *