மலேசியாவில் அமோக வரவேற்பை பெரும் கூலி ப்ரீ புக்கிங்.. வசூல் விவரம்

கூலி
லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
அமீர் கான், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியுள்ளது.
மலேசியா ப்ரீ புக்கிங்
கூலி திரைப்படத்திற்கு உலகெங்கும் ப்ரீ புக்கிங்கில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மலேசியாவில் துவங்கி இருக்கும் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை மலேசியாவில் மட்டுமே ரூ. 1.6 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் ப்ரீ புக்கிங் வசூலாக பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் மலேசியாவில் லியோ படம் செய்த ப்ரீ புக்கிங் வசூலை கூலி முறியடித்துவிடும் என கூறுகின்றனர்.