மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜய்யின் புலி பட தயாரிப்பாளர்.. மாரடைப்பா..

தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் நடிகர் விஜய்யின் மேலாளராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர் பிடி செல்வகுமார்.
இவர் நடிகர் விஜய்யின் புலி படம் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.
புதன்கிழமை காலை திடீரென பி.டி.செல்வகுமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.