மருத்துவமனையில் அட்மிட் ஆன நடிகர் பொன்னம்பலம்.. என்ன ஆனது

நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து இருப்பவர். நாட்டாமை படம் உட்பட பல படங்களில் அவர் நடித்த ரோல்கள் மிரட்டலாக இருக்கும்.
தற்போது அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
அறுவை சிகிச்சை
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் அட்மிட் ஆகி இருக்கிறார்.
அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பதாகவும் அதற்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. சிகிச்சைக்காக ஜெயம் ரவி, சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் உதவினார்களாம். அவர்களுக்கு பொன்னம்பலம் நன்றி கூறி இருக்கிறார்.