மயிலின் அப்பாவை அறைந்த சரவணன்.. பெரிதாகும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

மயிலின் அப்பாவை அறைந்த சரவணன்.. பெரிதாகும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

சரவணன் வேறொரு பெண் உடன் ஊர் சுற்றுவதை மயிலின் அப்பா கோவிலில் பார்த்துவிட்ட நிலையில் அது பற்றி நியாயம் கேட்பதற்காக நேராக அவர்கள் வீட்டுக்கே செல்கிறார்.

ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி நடுத்தெருவில் விட்டுட்டு இப்போது இன்னொருத்தியை கூட்டிட்டு சுத்தி பொறுக்கித்தனம் பண்ணிட்டு இருக்காரா என மயிலின் அப்பா கேட்கிறார்.

மயிலின் அப்பாவை அறைந்த சரவணன்.. பெரிதாகும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ | Pandian Stores 2 Promo 23Rd To 28Th March 2026

பளார் விட்ட சரணவன்

அப்போது அங்கே வந்த சரவணன் கடும் கோபத்தில் மயிலின் அப்பாவை பளார் என இரண்டு முறை அறைந்துவிடுகிறார்.


அதன் பின் மயில் வந்து அவர்களை தடுத்து அங்கிருந்து கூட்டிச்செல்கிறார். மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவள் அம்மா சொல்லப்போக அதையும் தடுத்துவிடுகிறார்.

நானே சம்பாதித்து தன்னையும் குழந்தையையும் பார்த்துக்கொள்கிறேன் என வீட்டுக்கு வந்த பின் உருக்கமாக சொல்கிறார் மயில். ப்ரோமோவை பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *