மமிதா பைஜூ முதல் அனஸ்வரா ராஜன் வரை, மலையாள இளம் நடிகைகள் வாங்கும் சம்பளம்.. முழு விவரம் இதோ?

மலையாள இளம் நடிகைகள்
மலையாள திரையுலகில் இருந்து இதுவரை பல திறமையான நடிகைகள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வந்து கொண்டிருக்கின்றனர்.
ஊர்வசி, ரேவதி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இவர்களை தொடர்ந்து தற்போது மமிதா பைஜூ, அனஸ்வரா ராஜன், அனிஷ்மா அனில்குமார், மாளவிகா மனோஜ் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக நடிகை மமிதா பைஜூ விஜய், தனுஷ், சூர்யா என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள விவரம்
இந்த நிலையில், மலையாளத்தில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனலாக வலம் வரும் நடிகைகளின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
மமிதா பைஜூ – ரூ. 2 கோடி
அனஸ்வரா ராஜன் – ரூ. 75 லட்சம்
மாளவிகா மனோஜ் – ரூ. 50 லட்சம்
அனிஷ்மா அனில்குமார் – ரூ. 30 லட்சம்






