மமிதா பைஜுவை தொடர்ந்து சூர்யா படத்தில் இணையும் சூரி பட நடிகை?.. வெளிவந்த அதிரடி அப்டேட்

சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பு’ இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
அதிரடி அப்டேட்
இதற்கிடையில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.
மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா தாண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூரியின் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ படத்தின் கதாநாயகி நடிகை பவானி ஸ்ரீ சூர்யாவின் 46 – வது படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.