மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. கமல் அதிரடி! நீதிமன்றம் எடுத்த முடிவு

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. கமல் அதிரடி! நீதிமன்றம் எடுத்த முடிவு


நடிகர் கமல்ஹாசனின் தக் லைப் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் நிலையில் கர்நாடகாவில் அதற்கு தடை போடப்பட்டு இருக்கிறது.

தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் கூறியதற்கு மன்னிப்பு கேட்டால் தான் தக் வெளியிட விடுவோம் என சில அமைப்புகள் அங்கே போராட்டம் நடத்தின. தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.. கமல் அதிரடி! நீதிமன்றம் எடுத்த முடிவு | I Wont Apologize Kamal Says Court Kannada Issue

மன்னிப்பு கேட்க முடியாது

நீதிமன்றமும் கமல் மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என கண்டிஷன் போட்டது. அதனால் கமல் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் தனது பேச்சு தவறாக புரியுந்துகொள்ளப்பட்டு இருக்கிறது என கூறி இருந்தார்.

ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லையே என நீதிபதி கேள்வி எழுப்ப, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், தவறாக புரிந்துகொண்டதற்கு முன்னிப்பு கேட்க முடியாது என கமல் கூறி இருக்கிறார்.

மேலும் தக் லைப் ரிலீஸ் கர்நாடகத்தில் தள்ளிவைக்கப்படுவதாகவும் அவர் கூற, வழக்கு அடுத்த விசாரணை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *