மகேஷ் பாபு படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… அடேங்கப்பா

எஸ்.எஸ்.ராஜமௌலி
எஸ்.எஸ்.ராஜமௌலி, தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.
பாகுபலி என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். முதல் பாகம் செம வெற்றியடைய 2ம் பாகத்தை இயக்கி வெற்றிக்கண்டார்.
இந்த படத்தை தொடர்ந்து ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆரை வைத்து RRR என்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றிக் கண்டார்.
புதிய படம்
தற்போது ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ப்ருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் மாதவன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.
ரூ. 1000 கோடி பட்ஜெட் படு பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ரூ. 200 வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.